பிலிப்பைன்ஸ்க்கு ப்ரமோஸ் ஏவுகணை வழங்கும் ஒப்பந்தம் - முக்கியத்துவம் என்ன?

பிலிப்பைன்ஸ்க்கு ப்ரமோஸ் ஏவுகணை வழங்கும் ஒப்பந்தம் - முக்கியத்துவம் என்ன?

Update: 2020-11-13 08:29 GMT

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் உண்மையான எல்லைக்கோட்டில் பதற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில் இந்தியா பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையை பிலிப்பைன்ஸ்க்கு வழங்க தயாராகி வருகிறது. சீனாவிடம் எல்லையைப் பகிர்ந்து கொள்வதுடன், தெற்கு சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனாவுடன் சற்று மோதல் போக்கிலேயே அதன் அண்டை நாடான பிலிப்பின்ஸ் உள்ளது. 

பிலிப்பைன்சுக்கு இந்த முக்கியமான ஏவுகணை வழங்கும் திட்டம் சில காலமாகவே விவாதிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் இத்திட்டம், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிலிப்பைன்ஸ் அதிபருக்கும் அடுத்த வருடம் பிப்ரவரியில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்திட்டம் கையெழுத்தானால் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்த இந்த ப்ரமோஸ் ஏவுகணையின் முதல் வாடிக்கையாளராக பிலிபைன்ஸ் இருக்கும். 

Full View

 290 கிலோமீட்டர் வரை தாண்டி சென்று தாக்கும் திறன் உடைய இந்த ஏவுகணைகள், ஏற்கனவே இந்திய ராணுவம், கப்பல் படை விமானப் படையில் பெரும் எண்ணிக்கையில் உள்ளது.

 இதை உருவாக்கும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இந்த ஏவுகணையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாகங்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் அதன் விலையை குறைக்க சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் குறைந்தது 3 சோதனைகள் ஆவது நடத்தப்பட்டது. 

Full View

 ஏவுகணை செல்லும் தூரத்தை அதிகப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அதிகப்படுத்தபட்ட ஏவுகணையில் சோதனைகளும் நடைபெற்று வருகிறது.

 சுமார் 500 கிலோமீட்டர் வரை செல்லும் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் பெற வாய்ப்புள்ளது. பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் முதல் நிலை அடிப்படையிலான ஏவுகணை அமைப்பு பேட்டரிக்கு இவை போய் சேரும். பலவிதமான சோதனைகளுக்குப் பிறகே இவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Similar News