கவலைக்குள்ளாக்கும் காற்று மாசுபாடு- வருங்காலத்தில் என்னதான் நடக்கும்?

கவலைக்குள்ளாக்கும் காற்று மாசுபாடு- வருங்காலத்தில் என்னதான் நடக்கும்?

Update: 2021-02-10 16:15 GMT

டெல்லியில் வாகன பெருக்கம், தொழிற்சாலை கழிவுகளால் காற்று தர குறியீடு தொடர்ந்து மிக மோசமடைந்த பிரிவில் நீடித்து வருவதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நாட்டின் தலைநகர் டெல்லியில் அண்டை மாநிலங்களில் இருந்து எரிக்கப்படும் விவசாய கழிவுகளால் காற்று மாசு அதிகரிக்கிறது என புகார் எழுந்தது. தொடர்ந்து பழைய வாகனங்களின் பெருக்கம், தொழிற்சாலை கழிவுகளால் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்தது. 

இருப்பினும், கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நீர்நிலைகள் தெளிவுடன் காணப்பட்டன. காற்றில் மாசு அளவு குறைந்து காற்றின் தரமும் உயர்ந்தது. ஆனால் மீண்டும் வாகனங்களை அதிகமாக பயன்படுத்தும் பொழுது, மேலும் தேவையற்ற பொருட்களை எரிப்பதன் வாயிலாகவும் காற்று மாசுபாட்டின் அளவு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, காற்றின் தரமும் மோசமடைந்து வருகிறது.  

பருவநிலை மாற்றத்தினால் தெளிவற்ற வானிலை காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் குறைந்த வேகத்திலேயே இயங்குகின்றன. டெல்லியில் ஒட்டு மொத்த காற்று தர குறியீடு 325 என்ற அளவில் உள்ளது. இதனால், காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமடைந்த பிரிவில் நீடிக்கிறது. இதனை காற்று தரம் மற்றும் பருவநிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இது போன்று தொடர்ச்சியாக காற்று மாசுபாடு நீடிக்க,  வருங்காலத்தில் நாம் எதிர்பாராத பல விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம் என்றும் இந்த ஆராய்ச்சி அமைப்பு எச்சரித்துள்ளது

Similar News