குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது போடப்படும்? மத்திய அரசு தகவல் !

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த வருடம் ஜனவரி அல்லது மார்ச் மாதங்களில் தொடங்கும். முதலில் இணைநோய் உள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகளுக்கான தடுப்பூசியில் கோர்பேவேக்ஸ், கோவாவேக்ஸ், ஜைகோவ்டி, கோவேக்சின், ஆகிய 4 தடுப்பூசிகள் இந்த வருட இறுதிக்குள் வந்துவிடும். இவை குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நிச்சயமாக முக்கிய பங்காற்றும்.

Update: 2021-10-27 03:11 GMT

இந்தியாவில் குழந்தைகளுக்கு இன்னும் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் மத்திய அரசு சார்பில் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த வருடம் ஜனவரி அல்லது மார்ச் மாதங்களில் தொடங்கும். முதலில் இணைநோய் உள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகளுக்கான தடுப்பூசியில் கோர்பேவேக்ஸ், கோவாவேக்ஸ், ஜைகோவ்டி, கோவேக்சின், ஆகிய 4 தடுப்பூசிகள் இந்த வருட இறுதிக்குள் வந்துவிடும். இவை குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நிச்சயமாக முக்கிய பங்காற்றும்.

மேலும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டியுள்ளது. அதனை தொடங்குவதற்கு முன்னர் ஒவ்வொரு அம்சத்தையும் உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. அது மட்டுமின்றி தடுப்பூசி விநியோகத்தையும், இருப்பையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. இதற்கு என்று சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இவை அனைத்தும் செய்து முடித்த பின்னரே தடுப்பூசி போடும் பணியை தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News