மீண்டும் உயரும் கொரோனா: கட்டுக்குள் வருவது எப்போது!

Update: 2022-01-11 05:34 GMT

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது. அதன்பின்னர் படிப்படியாக உயர்ந்து பல லட்சம் மக்களின் உயிரை பறித்தது. அதன் பின்னர் தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு வெற்றிகரமாக அனைவருக்கும் செலுத்தப்பட்டு வந்தால் தொற்று எண்ணிக்கை மிக வேகமாக குறைந்தது. இதனிடையே கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 2வது அலை ஆரம்பித்து மீண்டும் கோரத்தாண்டவம் ஆடியது. கொரோனாவில் இருந்து டெல்டா மற்றும் டெல்டா பிளஸாக மாறியது. இதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள் இரவு, பகலாக பணியாற்றி அதனையும் விரட்டியடித்தனர்.

இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று காலடி வைத்த பின்னர் மீண்டும் கொரோனா தொற்றின் வேகம் உயரத் தொடங்கியுள்ளது. முன்பு இருந்த 2 அலைகளைப் போல இல்லாமல் மிக வேகமாக ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி 9,195 ஆக இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு வாரத்திலேயே 58 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை ஒரு சில நாட்களிலேயே உயர்ந்து தினசரி பாதிப்பாக 1.79 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த தொற்றுகளில் இருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. விரைவில் மூன்றாம் அலையை இந்தியா கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News