தந்தையை போன்று விமானப்படையில் இணைவேன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் வீரரின் 'மகள்' தகவல்!

எனது தந்தை என்னை படிப்பில் கவனம் செலுத்த கூறினார். அப்போதுதான் நல்ல மதிப்பெண் கிடைக்கும். தானாக அனைத்து பணிகளும் கிடைக்கும் என நம்பிக்கை அளித்தார். இவ்வாறு ஆரத்யா கூறினார்.;

Update: 2021-12-12 02:59 GMT
தந்தையை போன்று விமானப்படையில் இணைவேன்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் வீரரின் மகள் தகவல்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். அந்த விபத்தில் விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகானும் ஒருவர். இவர் உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவை சேர்ந்தவர் ஆவார்.

இவரது உடல் நேற்று (டிசம்பர் 11) நேற்று ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவருடைய 12 வயது மகளர் ஆரத்யா மற்றும் மகன் அவிராஜ் 7, ஆகிய இரண்டு பேர் தீ மூட்டினர். இதன் பின்னர் ஆரத்யா செய்தியாளர்களிடம் பேசும்போது, வருங்காலத்தில் தனது தந்தையை போன்று விமானப்படையில் இணைய உள்ளேன். எனக்கு என்னுடைய தந்தைதான் ஹீரோ.

மேலும், எனது தந்தை என்னை படிப்பில் கவனம் செலுத்த கூறினார். அப்போதுதான் நல்ல மதிப்பெண் கிடைக்கும். தானாக அனைத்து பணிகளும் கிடைக்கும் என நம்பிக்கை அளித்தார். இவ்வாறு ஆரத்யா கூறினார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News