ஆழ் கடலில் காற்றாலைகள் நிறுவி மின்சாரம் தயாரிப்பு: இந்தியாவில் சாத்தியமா நடைபெறும் ஆய்வு?
இந்தியாவின் ஆழ் கடலில் காற்றாலைகளை நிறுவிய மின்சாரம் தயாரிப்பது பற்றி சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து வருகிறது
இந்தியாவில் பல்வேறு விதங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஏனெனில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி அவர்கள் பதவியேற்ற பின் புதுப்பிக்கத்தக்க கூடிய வளங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஏனெனில அதனை வளங்களை நாம் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலமாக மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்ய முடியும் என்பதையும் அரசு உணர்ந்து இருக்கிறது.
இதன் காரணமாக தான் சூரிய மின்சக்தி ஆற்றல் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவி மின்சாரம் தயாரிப்பது பற்றி சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் இந்தியாவில் தமிழ்நாட்டில் குஜராத் ஆகிய மாநிலங்களில் இத்தகைய காற்றாலைகளை நிறுவி மின்சாரம் தயாரிக்கலாமா?என்பது பற்றிய யோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
இரண்டு மாநில கடல் பகுதிகளிலும் காற்று 12 முதல் 18 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் வீசுவதன் காரணமாக இங்கு காற்றாலைகளில் இயக்குவதற்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் இந்த ஆய்வில் இந்த இரண்டு மாநிலங்களில் நடைபெறுவதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவுக்கான துணைத் தலைவர் அணில் பாட்டியா கூறி இருக்கிறார். மேலும் காற்றாலைகள் மூலம் நான்காயிரம் மிக வட்ட மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை மத்திய அரசு அண்மையில் ஒப்பந்தப்புள்ளி கூறியதை எடுத்து ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவும் பணி நடைபெற்று நடைபெற தொடங்கி இருக்கிறது.
Input & Image courtesy: Polimer News