எஸ்.பி.ஐ. டெபாசிட் ஏடி.எம்.களில் பணம் எடுப்பதற்கு தடை.!

இந்தியா முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கியில் ஏ.டி.எம். டெபாசிட் செய்யும் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதன் வங்கியின் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-22 10:05 GMT

தமிழகம் முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் மட்டும் சுமார் ரூ.48 லட்சம் நூதன முறையில் திருடு போயுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே டெபிட் கார்டு மூலமாக பல மறை பணம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களிலும் நூதன முறையில் திருடு நடந்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவலை வெளியிட்டுள்ளார்.




 


இந்த ஏ.டி.எம். கொள்ளை பற்றி விசாரிப்பதற்காக கூடுதல் ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றுவதற்கும் ஆலோசனை செய்து வருறோம் எனக்கூறினார்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கியில் ஏ.டி.எம். டெபாசிட் செய்யும் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதன் வங்கியின் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News