பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா: முஸ்லிம் சமூகம் ஆதரவு !

பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதாவை தனிப்பட்ட முஸ்லிம் பெண்கள் சமூகம் ஆதரித்து வருகிறது.

Update: 2021-12-24 14:11 GMT

சில நாட்களுக்கு முன்பு மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட மசோதாவாக பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மசோதா அறியப்பட்டது. காரணம், பல்வேறு நபர்கள் தங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இருந்தாலும், பெண்களின் திருமண வயதை பதினெட்டில் இருந்து 21 ஆக உயர்த்தும் புதிய மசோதாவை முஸ்லிம் சமூகம் ஆதரித்து வருவதற்கான முக்கிய காரணம் இது தானாம். பெண்களுக்கு சமூக சுதந்திரம் மட்டுமில்லாது அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தவும் அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டுவரும் விதமாகவும், ஒரு வாய்ப்பாகவும் இந்த சட்டம் திருத்தம் பார்க்கப்படுகிறது. 


மேலும் முஸ்லிம் பெண்களுக்கு இது ஒரு சிறந்த திருத்தமாகவும் காணப்படுகிறது. பல்வேறு முஸ்லிம் பெண் சமூகமும் இதை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது. மற்ற மதங்களைப் போல முஸ்லிம்களுக்கும் தனிப்பட்ட சட்டம் எதுவும் அங்கீகரிக்கப்படாத காரணத்தினால், முஸ்லீம்களின் ஷரியத் விண்ணப்பச் சட்டம், 1937 குழந்தைத் திருமணங்களைத் தடை செய்தல் மற்றும் உரிய பாதுகாப்பு அளித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.


அதைப்போல குர்ஆனும் பெண்களின் திருமண வயதை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மேலும் இதுபற்றி பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் அறிக்கை ஒன்றில் கூறுகையில், " தனிப்பட்ட முஸ்லிம் சமூகம் அனைவரும் இந்த சட்டத்தை வரவேற்பதாக கூறுகிறார்கள். மேலும் நிச்சயமாக இந்த சட்டம் முஸ்லிம் சமூகத்திற்கும் பொருந்தும் என்பதையும் அவர்கள் குறிப்பிட விரும்புகிறார்கள் என்று அந்த அறிக்கை முடிவு கூறுகிறது.

Input & Image courtesy: The hindu




Tags:    

Similar News