இந்தியாவின் வறுமை நிலை குறைந்துள்ளது: உலக வங்கியின் புதிய அறிக்கை!

இந்தியாவில் காணப்படும் வறுமையின் நிலை தற்போது குறைந்து உள்ளதாக உலக வங்கி அறிக்கை

Update: 2022-04-22 02:12 GMT

இந்தியாவின் வறுமை நிலை பற்றிய தன்னுடைய ஆய்வு அறிக்கையை மறு கட்டமைப்பு செய்து பன்னாட்டு உலக வங்கி என்று அழைக்கப்படும் உலக வங்கி தற்போது தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் தீவிர வறுமை நிலை குறைந்துள்ளதாகவும் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் இன் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. அதிகளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளை விடச் சிறிய அளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளின் வருமானம் ஆண்டுக்கு 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது.


அதே நேரத்தில் அதிகளவு நிலம் வைத்துள்ளவர்களின் வருமானம் 2% மட்டுமே உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு 26.3 சதவிகிதமாக இருந்த கிராமப்புற வறுமை 2019-ம் ஆண்டில் 11.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. நகர்ப்புற வறுமை 14.2 சதவிகிதத்திலிருந்து 6.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எனவே கடந்த 10 ஆண்டுகளில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறுமை சுமார் பாதி மடங்கு குறைந்ததாகும் உலக வங்கி கூறியுள்ளது. 


மேலும் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொருளாதார நிபுணர் நாகப்பன் அவர்கள் இதுபற்றி கூறுகையில், "இந்தியாவில் வறுமை குறைந்துள்ளது என்பதே உண்மை. கடந்த 30 வருடங்களுக்கு முன்பு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வீட்டில் டி.வி., மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் என்று ஏதாவது ஒரு பொருளைப் பார்க்க முடியுமா? ஏதாவது ஒரு பெரும் பணக்காரர்களின் வீடுகளில் மட்டுமே இந்த பொருள்களை எல்லாம் பார்க்க இயலும். ஆனால், இப்போது இந்த பொருள்களை எல்லாம் அனைவரின் வீட்டிலும் பார்க்க முடிகிறது. அதைப்போல் தற்போது அனைவரின் வீட்டிலும் ஆளுக்கு ஒரு மொபைல் போனும் பெருகி வருகிறது. எனவே மக்களின் வேலைவாய்ப்பு அவர்களின் வறுமை நிலையை போக்கு உள்ளது" என்று அவர் கூறினார். 

Input & Image courtesy:  Vikatan News

Tags:    

Similar News