சிவிங்கிப் புலி திட்டம் - மத்திய அரசின் கனவு திட்டத்தை பிரதமர் தொடக்கம்!

மத்திய அரசின் கனவு திட்டத்தின் ஒன்றான சிவிங்கி புலித்திட்டத்தை பிரதமர் செப்டம்பர் 17 திறந்து வைக்கிறார்.

Update: 2022-09-08 02:19 GMT

இந்தியக் காடுகளில் மீண்டும் சிவிங்கிப் புலித்திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு புதிய முயற்சியையும் மேற் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்காக மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செப்டம்பர் 17ஆம் தேதி இந்தத் திட்டத்தை திறந்து வைக்கிறார். மேலும் இந்தத் திட்டத்தை பற்றி முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்படும் புலிகள் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று பூங்காவில் விடப்படுவதற்கான ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 17 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளாகும். அன்று மத்திய பிரதேசத்திற்கு வருகை தரும் அவருடைய தலைமையில் மத்திய அரசின் இலட்சிய திட்டங்களில் ஒன்றான சிவிங்கி புலித்திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தி திறந்து வைக்கிறார். அத்துடன் சியோபூர் மாவட்டத்தில் மகளிர் உதவி குழுக்கள் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் பங்கேற்க உள்ளார்.


உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய உயிரினமாக சிவிங்கி புலிகள் ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருந்தன. ஆனால் அந்நியர் படையெடுப்பு காரணமாக அவை வேட்டையாடுதலை நோக்கமாகக் கொண்டது. தற்போது உலகில் சுமார் 7,000 புள்ளிகள் மட்டுமே மீதம் உள்ளன. அழிவின் விளிம்பில் இவை இருக்கின்றன. பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் தான் இவை அதிகமாக உள்ளது. இவற்றை மீண்டும் அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாப்பதற்காக மத்திய அரசு இந்து திட்டத்தை செயல்படுத்த உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dinamani

Tags:    

Similar News