உலகில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த நிர்மலா சீதாராமன்!
உலகில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பெற்று இருக்கிறார்.
உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக இந்த பத்திரிக்கை செல்வம், ஊடகம், செல்வாக்கு, தாக்கம் ஆகிய நான்கு பிரிகளில் இருந்து பட்டியலை தயாரித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் உலக அளவில் மட்டும் மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் லியான் முதலிடத்தை பிடித்து இருக்கிறார்.
உக்ரைன் போர் மற்றும் காலத்தில் அவருடைய செல்வாக்கு மிகுந்த தலைமையை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியலில் அவர் முதலிடம் பிடித்திருக்கிறார். குறிப்பாக இந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து ஆறு பெயர் இடம் பெற்று இருக்கிறார்கள். இதில் முக்கியமாக பதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 36-வது இடத்தில் பிடித்திருக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பட்டியலில் அவர் இடம்பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த இந்த முறை நான்காவது முறையாக அவர் இடம்பெடுத்து இருக்கிறார். அதேபோல HCL டெக் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா 53வது இடத்தையும், செபி தலைவர் ம 54வது இடத்தையும், இந்திய ஸ்டீல் ஆணைத் தலைவர் சோமா மண்டல் 67வது இடத்தையும் பிடித்து இருக்கிறார்கள். பயோகான் நிறுவனத்தலைவர் கிரண் 72 ஆவது இடத்தையும், நியாக்கா நிறுவன தலைவர் பால்குனி நாயர் 89 வது இடத்தையும் பிடித்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Dinamalar