குடியரசு தின வன்முறைக்கு விவசாயிகளைத் தூண்டியது யோகேந்திர யாதவ்! காங்கிரஸ் MP குற்றச்சாட்டு!

குடியரசு தின வன்முறைக்கு விவசாயிகளைத் தூண்டியது யோகேந்திர யாதவ்! காங்கிரஸ் MP குற்றச்சாட்டு!

Update: 2021-02-11 11:18 GMT

ஜனவரி 26 குடியரசு தினத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய வன்முறை தொடர்பாக தற்போது காங்கிரஸ் MP ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பிப்ரவரி 9 இல் காங்கிரஸ் MP ரவினீட் சிங் பிட்டு, குடியரசு தினத்தில் விவசாயிகள் வன்முறைக்குத் தூண்டியது ஆர்பாட்டக்காரர் யோகேந்திர யாதவ் என்று குற்றம் சாட்டியுள்ளார். 


மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்குப் பின்பு நன்றி கூறிய பிறகு பேசிய பிட்டு, "ஜனவரி 26 இல் விவசாயிகள் வன்முறைக்கு இறங்கிய முக்கிய காரணம் யோகேந்திர யாதவ்," என்று கூறி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். 

மேலும் பிட்டு, "யோகேந்திர யாதவை அரசாங்கம் கைது செய்தால் அரசாங்கம் நேரடியாக விவசாயிகளிடம் உரையாட முடியும். வேளாண் சட்டங்கள் குறித்து முன்பு பேசியவர் அவரே. எந்த விவசாயிகளும் நாட்டிற்கு எதிராக இல்லை. நாட்டின் கொடிக்கு ஒரு போதும் இழிவு செய்யப் பஞ்சாப் மக்கள் எண்ணமாட்டார்கள்," என்று கூறினார். "தற்போது ஆர்ப்பாட்டம் நடத்திவரும் மக்கள் காலிஸ் தானிய அமைப்புகளிடம் இருந்து நிதியைப் பெறுகின்றனர்," என்றும் குற்றம் சாட்டினார். 

டெல்லி காவல்துறை ராகேஷ் டிக்கட், ஆர்வலர் யோகேந்திர யாதவ், மேதா பட்கர் போன்ற விவசாயிகள் தலைவர்கள் 37 பேர் மீது வன்முறை ஈடுபட்டதிற்காக FIR பதிவு செய்தது. 

விவசாயிகள் மீது இந்த நடவடிக்கையானது அவர்கள் வன்முறையின் போது ஆத்திரமூட்டும் வகையில் உரையை வழங்கியதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாக டெல்லி காவல் ஆணையர் SN ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். வன்முறையில் நூற்றுக்கணக்கான காவல்துறை காயமடைந்தது தொடர்பாக விவசாய தலைவர்களின் பங்கு குறித்து அவர்களிடம் விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

Similar News