இளைஞர் சக்தியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!

இளைஞர் இந்தியா- 2047 நிகழ்ச்சியை மத்திய இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைக்கிறார்.

Update: 2023-03-04 02:00 GMT

இளைஞர் இந்தியா- 2047 நிகழ்ச்சியை மார்ச் 4-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் ரோப்பர் பகுதியில் மத்திய இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, இளைஞர் உத்சவாவின் டாஷ் போர்டையும் அவர் அறிமுகப்படுத்துகிறார். இந்த இளைஞர் உத்சவா நிகழ்ச்சி ஒரே நேரத்தில் பல்வேறு மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது. உத்ராகண்ட், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது.


இன்று தொடங்கி மார்ச் 31-ம் தேதி வரை நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் இளைஞர் சக்தியை கொண்டாடும் வகையில் கலை சார்ந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. நேரு யுவகேந்திரா அமைப்பின் மூலம் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 3 கட்டங்களாக போட்டிகள் நடத்தப்படும். முதல் கட்டமாக மாவட்ட அளவில் ஒரு நாள் போட்டிகள், மார்ச் முதல் ஜுன் வரையிலான காலகட்டத்தில் நடத்தப்படும்.


இதில் வெற்றி பெறுவோருக்கு இரண்டாம் கட்டமாக மாநில அளவில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நடத்தப்படுகிறது. இதில் வெற்றிபெறுவோர் 3-ம் கட்டமாக அக்டோபர் மாதத்தில் நடத்தப்படும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பர். இதில் ஓவியம், கட்டுரை, நடனம் மற்றும் பேச்சுப் போட்டியும், பாரம்பரிய கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News