நட்பு நாடான இந்தியா மீது தடைவிதிப்பது முட்டாள் தனமான செயல்: அமெரிக்க எம்.பி., பாய்ச்சல்!
நட்பு நாடாக விளங்கும் இந்தியா மீது அமெரிக்க பொருளாதார தடை விதிப்பது மிகப்பெரிய முட்டாள்தனமான செயல் என்று அந்நாட்டு எம்.பி., டெட் குரூஸ் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்காமல் இருந்தது. இதற்கு இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே போன்று ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கியதற்காக ஈராக் மீதும் அமெரிக்க பொருளாதார தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 5 எஸ் 400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்குவதற்கு பொருளாதார தடை விதிக்க வேணடும் என அமெரிக்க தற்போது கருத்து கூறி வருகிறது. ஆனால் இதற்கு அந்நாட்டு எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதன்படி அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அடங்கிய வெளியுறவு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியின் எம்.பி., டெட் குருஸ் கலந்து கொண்டு பேசியதாவது; நட்பு நாடான இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது பற்றி அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா மீது தடை விதிப்பது மிகப்பெரிய முட்டாள்தனமான செயலாக பார்க்கப்படும். எனவே அதிபராக பொறுப்பேற்று ஒரு ஆண்டிலேயே ஜோ பைடனால் இந்தியா உடனான நட்பு சீர்குலைந்துவிட்டது.
மேலும், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்பதற்காக அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிப்பதற்கு மறைமுக காரணம் எனவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் கூட தீர்மானத்தில் கலந்து கொள்ளவில்லை அவர்கள் மீது என்ன செய்வீர்கள் என காட்டமாக பேசினார். இந்தியா மீது தடை என்பதை கைவிட்டு வேறு வேலை பார்க்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடனை கடுமையாக சாடினார்.
Source, Image Courtesy: Dinamalar