அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் : அதிரடி உத்தரவை பிறப்பித்தார் அமெரிக்க அதிபர்.!
அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடி நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பகுதிகிளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்திட வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் உயிரிழப்பும் அதிகரித்து வந்தது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்திட அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஜோபைடன், துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பல்வேறு நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 30 நாட்களுக்குள் துப்பாக்கிகளின் எண்ணிக்கையை குறைக்க ஒரு விதியை உருவாக்க, நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள 3 மசாஜ் நிலையங்களில், சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள ஆசிய, அமெரிக்க தலைவர்களை சந்தித்து பேச, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனி விமானம் மூலம் வாஷிங்டனில் இருந்து அட்லாண்டா புறப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.