இஸ்ரோ-நாசாவின் 10 ஆண்டுகளுக்கு மேலான ஒத்துழைப்பிற்கு கிடைக்கப்போகும் வெற்றி: ஜூலை 30இல் விண்ணில் பாய்கிறது நிசார்!
பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை கண்டறிய உதவும் நிசார் செயற்கைக்கோளை இஸ்ரோ வருகின்ற ஜூலை 30ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவவுள்ளது
இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ நாசாவுடன் இணைந்து தயார் செய்துள்ளது அதுமட்டுமின்றி இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி-எப் 16 மூலம் முதல்முறையாக நாசா உடன் இணைந்து இயக்கப்படுகிறது என்பதன் குறிப்பிடத்தக்கது
இந்த நிசார் செயற்கைக்கோள் ஒவ்வொரு 12 நாட்களுக்கும் முழு உலகத்தை ஸ்கேன் செய்து உயர்தெளிவு திறன் அனைத்து வானிலை பகல் மற்றும் இரவு தரவுகளை வழங்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி புயல் கண்காணிப்பு மண் ஈரப்பதம் மாற்றங்கள் கடல் பணி கண்காணிப்பு பேரிடர் மீட்பு கப்பல் கண்டறிதல் போன்ற பல முக்கியமான பயன்பாடுகள் நிசார் செயற்கைக்கோளின் முக்கியமான பணிகள் என கூறப்படுகிறது