தமிழகம் 2-ம் இடம்!! நிதி ஆயோக் ஏற்றுமதி தரவரிசைப் பட்டியல்!!
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான ஏற்றுமதி தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதல் இடத்தையும், குஜராத் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
உத்தரப் பிரதேசம் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடல்சார் அல்லாத மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநில அரசு ஏற்றுமதித் துறையில் மேற்கொண்ட விரிவான சீர்திருத்தங்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கைகளின் நேரடி விளைவாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை, ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்புத் திட்டம், பொது வசதி மையங்கள், தளவாடச் சீர்திருத்தங்கள், சாலை இணைப்பு மற்றும் உலர் துறைமுகங்கள் ஆகியவை ஏற்றுமதித் தயார் நிலையை விரைவுபடுத்துவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.