ஓசூர் சர்வதேச விமான நிலையம் குறித்து கனிமொழி பேச்சு!! திமுகவினர் அதிர்ச்சி!!
By : G Pradeep
Update: 2026-01-22 14:49 GMT
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ஓசூரில் சர்வதேச விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து உள்ளூர் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2024-ம் ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்த நிலையில், விமான நிலையத்தால் பாதிக்கப்படும் என்பதால் 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கனிமொழி ஓசூரில் விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும் என கூறியுள்ளார். இதனால், விவசாயிகளிடையே மீண்டும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.