காங்கிரஸ் கட்சியை சேந்த பலராம் நாயக் பொரிகா அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை!
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலராம் நாயக் பொரிகா, கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டதற்கான செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கவில்லை. இந்த நிலையில் தேர்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாத காரணத்தினால், பலராம் நாயக் பொரிகா, அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலராம் நாயக் பொரிகா, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் தெலுங்கானாவின் மகாபுபாபாத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தலில் போட்டியிட்டதற்கான செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திற்கு அவர் சமர்ப்பிக்கவில்லை.
இது தொடர்பாக கடந்த தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் "கிடைத்த ஆதாரம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், பல்ராம் நாயக் பொரிகா தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. செலவு கணக்கை தாக்கல் செய்ய தவறுவது சரியான நடவடிக்கை இல்லை எனக்கூறப்பட்டு உள்ளது. எனவே பலராமன் நாயக் பொரிகா இனி லோக்சபா, ராஜ்யசபா, சட்டசபை மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடக்கும் தேர்தலில் அடுத்த 3 ஆண்டுகள் போட்டியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிடுகிறது." என்று அதில் குறிப்பிட்டிருந்தது.