ஒலிம்பிக் போட்டியில் கொரோனா பாதிப்பை தவிர்க்க முடியாது: WHO எச்சரிக்கை!

Update: 2021-07-22 13:01 GMT

தற்போது உள்ள கொரோனா காலகட்டத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே ஒலிம்பிக் நடைபெறும் இடங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் தற்போது கருத்து தெரிவித்துள்ளது இதைப்பற்றி WHO வின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கூறுகையில்,  "டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது" என்று அவர் எச்சரித்துள்ளார்.


ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன இத்தகைய சூழ்நிலையில் அங்கு பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டத்தில், டெட்ராஸ் அதனோம் இதுபற்றி கூறுகையில், கொரோனா பாதிப்பு புள்ளி விபரத்தின் மூலம், ஒலிம்பிக் போட்டியில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. வைரஸ் பிரச்னையை முற்றிலும் அங்கிருந்து அழிப்பது என்பது முடியாத காரியம்.


எனவே இந்த பிரச்சினைகளுக்கு இடைப்பட்ட ஒரு சூழ்நிலையில் கூட ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நோய்த்தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் வெற்றிகரமாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், அங்கு நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தூக்கலை டோடை முழுமையாக போட்டுக் கொண்டபின் அனுமதிக்கப்படுவது மேலும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு இருக்கும் என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

Similar News