அயோத்தியில் மோடியின் பிரம்மாண்ட ரோடுஷோ!
அயோத்தியில் நேற்று நடந்த பிரம்மாண்ட ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார் .
நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. கடந்த மாதம் 19-ஆம் தேதி 12 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்கு பதிவும் 89 தொகுதிகளுக்கு 26-ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவும் நடைபெற்று முடிந்த நிலையில் வருகிற ஏழாம் தேதி 94 மக்களவை தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரதமர் மோடி நேற்று ரோடுஷோவில் பங்கேற்றார். முன்னதாக சமாஜ்வாடி கட்சியின் கோட்டையான மாநிலத்தின் எட்டாவாவிலும் மதியம் சீதாப்பூரிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பிறகு அயோத்தி சென்றார். பின்னர் ராமஜென்ம பூமியில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் லதா சவுக்கு வரை ரோடுஷோ மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது .கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெறுகிறது .
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற விழாவில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தி குழந்தை ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவுக்கு பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி நேற்று அயோத்தி சென்றார் .அங்கு அவருக்கு பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் அயோத்தி விழா கோலம் கொண்டுள்ளது. தனது எம்.பி தொகுதியான வாரணாசிக்கு வரும் பிரதமர் அங்கு தங்கி அதை சுற்றியுள்ள தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறார்.