புதுச்சேரி : கொரோனாவால் உயிரிழப்போர் குடும்பத்தினருக்கு ரூ 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்-முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.!

புதுச்சேரி : கொரோனாவால் உயிரிழப்போர் குடும்பத்தினருக்கு ரூ 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்-முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.!

Update: 2020-07-24 02:12 GMT

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் கொரோனா தடுப்பு குறித்து பேரவையில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர் தங்களது கருத்தை பதிவு செய்தனர். மேலும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேரவையில் பதில் அளித்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக இதுவரை ஒன்பது கோடியே 16 லட்சம் வந்துள்ளது, மேலும் கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா ரூ 700 மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதுச்சேரிய யூனியன் பிரதேசத்தில் இதுவரை 2,421 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 34ஆக உள்ளது என்றார். 

Similar News