உலகின் சிறந்த விஞ்ஞானிகள் தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 100 பேர்.!
உலகின் சிறந்த விஞ்ஞானிகள் தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 100 பேர்.!
உலகில் முதல் இரண்டு சதவீத சிறந்த விஞ்ஞானிகள் தரவரிசை பட்டியலை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகள் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பட்டியல் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அவர்கள் இதுவரை சமர்ப்பித்த ஆவணங்கள் வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விஞ்ஞானிகள் முதலில் மற்றும் இதுவரை சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை எண்ணிக்கையும் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் மெட்ராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த 36 பேராசிரியர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவர்கள் விஞ்ஞானம், நானோ தொழினுட்பம், ரசாயனம் மற்றும் மருத்துவ பொறியியல் போன்ற பல துறை தொடர்பாக ஆராய்ச்சி கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திருச்சியைச் சேர்ந்த தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த 7 விஞ்ஞானிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் மாநிலத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒன்பது பெரும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் எட்டு பெரும் இடம்பெற்றுள்ளனர். தமிழக மத்திய பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் பெரியார் மற்றும் அண்ணா, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலா ஒரு விஞ்ஞானிகளின் பெயர் இடம்பெற்றுள்ளது.