"மோடிக்கு போய் கொரோனா பரிசோதனை செய்" - வீட்டிற்கு பரிசோதிக்க வந்த அரசு சுகாதார ஊழியரிடம் வம்பிழுத்த இஸ்லாமியர்!

"மோடிக்கு போய் கொரோனா பரிசோதனை செய்" - வீட்டிற்கு பரிசோதிக்க வந்த அரசு சுகாதார ஊழியரிடம் வம்பிழுத்த இஸ்லாமியர்!

Update: 2020-04-01 06:49 GMT

டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்ளிகி ஜமாத் மாநாட்டின் மூலம் தமிழ்கத்திலும் கொரோனா பரவலாக்கப்பட்டு இருக்கிறது. இம்மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து 1500 பேர் கலந்துக் கொண்டனர். அதில் கிட்டத்தட்ட 700 பேரை மட்டுமே தொடர்புக்கொண்டு பரிசோதனை செய்ய முடிந்தது எனவும், மற்றவர்கள் தயவு செய்து பரிசோதனைக்கு முன்வர வேண்டும் எனவும், பலர் தங்கள் கைபேசிகளை ஆப் செய்து வைத்துள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மன்றாடினார்.

இந்நிலையில், தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். அவ்வாறு பரிசோதனை செய்ய வந்த அதிகாரியிடம் ஒரு இஸ்லாமியர் "மோடி 153 நாட்டுக்கு போயிருக்கான், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் அவங்கள எல்லாம் போய் மொதல்ல செக் பண்ணுங்க, சும்மா இங்க வந்து எதுக்கு செக் பண்றீங்க" என அவமதிக்கும் விதத்தில் பேசியுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

Similar News