புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக 1140 பேர் மீது வழக்குப்பதிவு..

புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக 1140 பேர் மீது வழக்குப்பதிவு..

Update: 2020-04-04 14:45 GMT

புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக 1140 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுமார் 4446-க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் மேலும் சமூக விலகலை கடைபிடித்து பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

கொரோனோ நோய் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு கடந்த 25ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மேலும் மாநில எல்லைகள் அனைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது அத்தியாவசிய பொருட்களின் வாகனங்களை தவிர வேறு எந்த வாகனங்களும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனிடையே புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாஹே பிராந்தியத்தில் 58வயது மூதாட்டி ஒருவருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனிடையே டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு புதுச்சேரி திரும்பிய 3பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அவருடன் பழகிய ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4-பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதேபோல் வெளிநாடு சென்று வந்தவர்கள் என 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டில் இருந்தபடி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் ஊரடங்கு உத்தராவல் பொதுமக்களின் நடமாட்டம் மாற்றும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த பால் மற்றும் மருந்தகத்தை தவிர மீதமுள்ள அத்தியாவசிய பொருட்களின் கடைகள் அனைத்தும் காலை 6மணி முதல் மதியம் 2.30மணி வரை திறந்து இருக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது மேலும் கூட்டம் அதிக அளவில் கூடுவதால் பெரிய மார்க்கெட் தற்போது தற்காலிகமாக புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வருகிறது இங்கு பொதுமக்கள் சமூக விலகலை பின்பற்றி காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்க வெளியே வருகின்றனர் இருந்த போதிலும் ஒரு சில இளைஞர்கள் தேவையில்லாமல் இரு சக்கர வாகனத்தில் வெளியே சுற்றுகின்றனர் அப்படி தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களின் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

கடந்த 11நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக, 1140 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுமார் 4446-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியை பொறுத்தவரை கோரோனா தொற்று பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகளின் அறிவித்தல்களை கேட்டு தங்களின் வீடுகளிலேயே மக்கள் இருக்கின்றனர்.

Similar News