மீண்டும் எபோலா வைரஸ் ? ஆப்பிரிக்கா காங்கோவில் மூன்று பேருக்கு எபோலா வைரஸ் உறுதி, இரண்டு பேர் உயிரிழப்பு - தாங்குமா உலகம்?

மீண்டும் எபோலா வைரஸ் ? ஆப்பிரிக்கா காங்கோவில் மூன்று பேருக்கு எபோலா வைரஸ் உறுதி, இரண்டு பேர் உயிரிழப்பு - தாங்குமா உலகம்?

Update: 2020-04-17 02:56 GMT

2014 ஆம் ஆண்டு எபோலா வைரஸ் ஆப்ரிக்காவின் குயினே நாட்டில் பரவ ஆரம்பித்தது. 23 ஆயிரம் பேரை இந்த வைரஸ் தாக்கியது, 11 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர். அதாவது, வைரஸ் தொற்று இருக்கும் இரண்டு பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரஸ் அருகிலுள்ள நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது. 

2015 ஆம் ஆண்டு, இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று லட்சம் மக்களுக்கு இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. 29 டிசம்பர் 2015 இந்த நோய் பரவல் குயினே நாட்டில் கட்டுப்படுத்தி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இன்று வரை WHO நிறுவனம் இதை "International Emergency" என்ற நிலையிலேயே வைத்துள்ளது.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு காங்கோவில் இந்த நோய் மீண்டும் பரவ ஆரம்பித்தது. இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். காங்கோ நாட்டு சுகாதாரத்துறையின் கடின உழைப்பால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் அவ்வப்போது சில பேருக்கு தொற்று இருந்தது.

கடந்த 40 நாட்கள் தொற்று இல்லமால் இருந்தது. தற்போது மூன்று பேருக்கு தொற்று உறுதியானது அதில் இரண்டு பேர் இறந்தனர். காங்கோ நாட்டு சுகாதார துறைக்கு இதில் அனுபவம் இருப்பதாலும், தடுப்பு மருந்து இருப்பதாலும், உலகம் முழுவதும் LockDown அமலில் இருப்பதாலும் இந்த தொற்று மற்ற நாடுகளுக்கு பரவ வாய்ப்பில்லை என தெரிகிறது.

Similar News