எம்.எஸ் டோனி கேப்டனாக இல்லாமல் இருந்தால் பேட்டிங்கில் பல சாதனையை படைத்திருப்பார் - கௌதம் கம்பீர்.!

எம்.எஸ் டோனி கேப்டனாக இல்லாமல் இருந்தால் பேட்டிங்கில் பல சாதனையை படைத்திருப்பார் - கௌதம் கம்பீர்.!

Update: 2020-06-15 12:46 GMT

எம்.எஸ் டோனி இந்திய அணிக்கு கேப்டனாக இல்லாமல் இருந்தால் பேட்டிங் தர வரிசையில் மூன்றாவதாக களமிறங்கி பிரமாதமாக விளையாடி இருப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் மற்றும் டெல்லி எம்.பியுமான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் கனெக்டட் என்ற நிகழ்ச்சியில் பேசிய கௌதம் கம்பீர்: இந்திய கிரிக்கெட் உலகம் ஒரு விஷயத்தை தவிர விட்டது. அது என்னவென்றால் எம்.எஸ் டோனியை இந்தியாவுக்காக மூன்றாவது வரிசையில் பேட்ஸ்மேனாக களமிறக்காதது தான். எம்.எஸ் டோனி கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் மூன்றாவது ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடி இருந்தால் தற்போது இருக்கும் டோனியை தவிர்த்து இந்த கிரிக்கெட் உலகம் வேறுபட்ட டோனியை ரசித்து இருக்கும். அது முற்றிலும் வேறுபட்டதாக இருந்திருக்கும் எனக் கூறியுள்ளார்.


டோனி மூன்றாவது வரிசையில் களமிறங்கி இருந்தால் இன்னும் பல ரன்களை அடித்து இருப்பார் மற்றும் பல சாதனை படைத்திருப்பார். அவரை மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக கிரிக்கெட் உலகம் ரசித்து இருக்கும். அவர் கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் இது எல்லாம் சாத்தியமாகி இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.   

Similar News