புகழின் உச்சியில் இருக்கும் நடிகர்கள் மர்மமான முறையில் மரணம் - சல்மான் கானை ஹிந்தி திரை உலகம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டதா?

புகழின் உச்சியில் இருக்கும் நடிகர்கள் மர்மமான முறையில் மரணம் - சல்மான் கானை ஹிந்தி திரை உலகம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டதா?

Update: 2020-06-19 12:08 GMT

நிழல் உலக தாதா தாவூத்தின் ஆதிக்கம் மறைமுகமாக இந்திய அரசியலிலும் நேரடியாக கபூர்கள், கான்களை வைத்து இந்தித் திரையுலகிலும் இன்னும் தொடர்வதாகவே தெரிவதாக  சமூக ஆர்வலர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

சில நடிக நடிகைககள் புகழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது மர்மமானமுறையில் மரணமடையும் சம்பவங்களும் இதை உறுதிசெய்கின்றன.

திரையுலகிலும் அரசியலிலும் இன்று நெப்போடிசம் எனும் வாரிசு அரசியல் கோலோச்சுவதன் கொடூர வலிகள் அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும்.

ஏதேனும் புரட்சி ஏற்பட்டால் தான் நம் சமூகம் ஆரோக்கியமான மாற்றத்தை நோக்கிப் பயணிக்கக் கூடும். ஆனால் புரட்சி என்கிற சொல் இன்றைய தலைமுறையினருக்கு நகைச்சுவையாக இருப்பதால் மாற்றத்துக்கான வாய்ப்புகள் அருகி விட்டதாகவே தோன்றுகிறது.

தற்போது இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. துறைக்குள் இருக்கும் வாரிசு அரசியல் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சுஷாந்தின் தற்கொலை தொடர்பாக பிஹாரைச் சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர், கரண் ஜோஹர், சல்மான் கான், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோர் மீது ஐபிசி 306, 109, 504 மற்றும் 506 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள ஓஜா, "7 படங்களிலிருந்து சுஷாந்த் நீக்கப்பட்டார் என்பதை எனது புகாரில் தெரிவித்துள்ளேன். அதுபோன்ற சூழல் உருவாக்கப்பட்டதுதான் அவர் தற்கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபமும், சுஷாந்த் 7 படங்களிலிருந்து நீக்கப்பட்டார் என்றும், திரைத்துறையின் இரக்கமற்ற தன்மைதான் ஒரு திறமைசாலியின் உயிரை வாங்கிவிட்டது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Similar News