வைரஸை ஏவி விட்டு எல்லையில் சீண்டும் சீனா - பொருளாதார ரீதியாக பதிலடி கொடுக்கும் இந்தியர்கள், சீன அரிசி வகைப்படுத்தும் இயந்திர ஆர்டர்கள் ரத்து.!

வைரஸை ஏவி விட்டு எல்லையில் சீண்டும் சீனா - பொருளாதார ரீதியாக பதிலடி கொடுக்கும் இந்தியர்கள், சீன அரிசி வகைப்படுத்தும் இயந்திர ஆர்டர்கள் ரத்து.!

Update: 2020-06-30 03:13 GMT

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த எதிர்பாராத மோதலில் ‌20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த பின் சீனாவின் துரோக செயலால் இந்தியர்களிடையே சீனாவுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருகிறது. இது மத்திய அரசின் நடவடிக்கைகளிலும் எதிரொலித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் சீனாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் சீன தயாரிப்பு பொருட்களை உடைத்தும் எரித்தும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவலாலும் அதைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்காலும் பெரும்பாலான இந்தியர்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் மலிவு விலை சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்று உறுதி பூண்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தம் சிங் நகர்‌ மாவட்ட அரிசி அரவை மில் உரிமையாளர்கள் மலிவான சீன அரிசி சுத்தம்‌ செய்யும் இயந்திரங்களுக்கு அளிக்கப்பட்ட ‌ஆர்டர்களை ரத்து செய்துவிட்டு அதிக விலை கொண்ட ஜப்பானிய இயந்திரங்களை‌ வாங்க முடிவு செய்துள்ளனர்.

உத்திரகண்ட் மாநிலத்தின் 'அரிசிக் கிண்ணம்' என்று அழைக்கப்படும் இந்த மாவட்டத்தில் 257 அரிசி அரவை மில்கள் உள்ளன. இவற்றில் 174 மில்கள்‌ ஏற்கனவே சீன தயாரிப்பு இயந்திரங்களை வாங்கி விட்டன. ஜப்பானிய இயந்திரங்களுடன் ஒப்பிடும்‌ போது சீன இயந்திரங்கள் விலை மலிவாக இருப்பதால் அதிகம் விரும்பப்பட்டதாகவும், ஆனால் கல்வான்‌ பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்த பிறகு சீன இயந்திரங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் ஜப்பானிய இயந்திரங்களை வாங்கலாம் என்றும் மில் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக எகானாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் கிட்டத்தட்ட ₹ 5 லட்சம் வரை அதிகமாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. சீன இயந்திரங்களின் விலை ₹ 18 லட்சம் என்று உள்ள நிலையில் ஜப்பானிய இயந்திரங்களின் விலை ₹ 23 லட்சம் வரை வருகிறது.

இந்த இயந்திரங்கள் கருப்பு மற்றும் உடைந்த அரிசியை நீக்கி தரமான அரிசியை தனியாகப் பிரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மில் உரிமையாளர்கள் சீன இயந்திரங்களுக்கு அளிக்கப்பட்ட ஆர்டரை ரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News