17 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கிய, பிரதமர் மோடியின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் ..!

17 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கிய, பிரதமர் மோடியின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் ..!

Update: 2020-08-07 08:38 GMT

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை வழங்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியால் கரீப் கல்யாண் ரோஜக்கர் அபியான்(GKRA) 17 கோடி மனித வேலை நாட்களுக்குத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டமானது பீகார், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் போன்ற ஆறு மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பைத் தந்துள்ளது. வியாழக்கிழமை ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் "அபியான் திட்டத்திற்கு இதுவரை 13,240 கோடி செலவிடப்பட்டுள்ளது மேலும் ஆறுவாரங்களிலே 17 கோடி மனித நாட்கள் வேலைத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 24 மார்ச் 2020 இருந்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பித்த நிலையில், லட்சக்கணக்கான நகரம் மற்றும் கிராமங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். உத்தர பிரதேசில் மற்றும் 30 லட்சம் புலம்பெயர்த் தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ளனர். உள்ளூர் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கும் கிராமப்புறங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் பா.ஜ.க கரீப் கல்யாண் ரோஜக்கர் அபியான்(GKRA) திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அரசாங்கம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் நகரத்துக்குச் செல்லவிரும்பாதவர்களுக்குக் கிராமங்களிலே நீண்ட நாள் வேலைத் திட்டத்தைக் கொண்டுவரவுள்ளது. "கிராமப்புறங்களில் இருக்க விரும்பியவர்களுக்கு நீண்டநாள் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை உருவாக்க ஒரு களம் ஆக அமையும்" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிராமப்புறங்களை மேம்படுத்தக் கிராமப்புற வீடுகள், சுகாதார வளாகங்கள், கால்நடை கொட்டகைகள் முதலிவற்றை அரசாங்கம் உருவாகியுள்ளது. இதுவரை 62,532 நீர்ப் பாசனங்கள், 1.74 லட்சம் கிராமப்புற வீடுகள், 14,872 கால்நடை கொட்டகைகள், 8963 குளங்கள், 2,222 சமூக சுகாதார வளாகங்கள், 5,909 பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மேலும் 564 கிராமங்களில் இணைய இணைப்பு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கரீப் கல்யாண் ரோஜக்கர் அபியான்(GKRA) கீழ் உள்கட்டமைப்பு வசதியை 50.000 கோடி செலவில் அமைக்க அரசாங்கம் அறிவித்தது. அரசாங்க திட்டத்தை நிறைவேற்ற 12 பல்வேறு அமைச்சகங்கள் வேலைசெய்து வருகின்றனர்.



source: https://www.financialexpress.com/economy/garib-kalyan-rojgar-abhiyaan-provides-17-crore-man-days-work-to-migrants-pays-this-much-in-6-weeks/2046772/

Similar News