அ.தி.முக - அ.ம.மு.க இணைப்பு - சசிகலா விடுதலை - தி.மு.க கப்பலில் விழப்போகும் ஓட்டை - 2021 தேர்தல் கேம் பிளான்! ஒரு அலசல்!

அ.தி.முக - அ.ம.மு.க இணைப்பு - சசிகலா விடுதலை - தி.மு.க கப்பலில் விழப்போகும் ஓட்டை - 2021 தேர்தல் கேம் பிளான்! ஒரு அலசல்!

Update: 2020-06-24 10:46 GMT

என்ன தான் கொரோனோ தொற்று பயத்தில் ஊரடங்கு, நிவாரண உதவிகள் என கட்சிகள் இயங்கினாலும் உள்ளூர கொரோனோவை விட 2021 சட்டமன்ற தேர்தல்தான் அரசியல் பிரமுகர்களையும், கட்சி தலைவர்களையும் தூங்க விடாமல் செய்கிறது. கிட்டத்தட்ட இரு திராவிட கட்சிகளுக்குமே இது வாழ்வா சாவா போராட்டமே, ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருபெரும் தலைவர்கள் இல்லாமல் முதல்வர் பதவிக்கு நடக்கவிருக்கும் முதல் தேர்தல். சுருங்க சொல்வதென்றால் தமிழக மக்களின் அடுத்த 20 ஆண்டுகள் எந்த மாதிரியான அரசியல் பாதையை விரும்புகிறார்கள் என முடிவு செய்யும் தேர்தல் வருகின்ற 2021 தமிழக சட்டமன்ற தேர்தல்.

இவ்வாறாக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் கட்சிகளின் குறிப்பாக திராவிட கட்சிகளின் வியூகமோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து கொண்டிருக்கிறது.

தி.மு.க அதன் கூட்டணி கட்சிகளை கிட்டத்தட்ட கடந்த பராளுமன்ற தேர்தலில் முடிவு செய்து விட்டது. மேலும், அவர்களில் சிலர் தற்போது மனக்கசப்பில் இருந்தாலும் வேறு வழியில்லாமல் அவர்களை வைத்து தி.மு.க-வும், தி.மு.க-வை வைத்து அவர்களும் ஓட்ட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். ஏற்கனவே கட்சியில் சீனியர்களை பட்டத்து இளவரசர் கலந்து ஆலோசிக்கவில்லை, அறிக்கைகளை தனித்து விடுகிறார் என இரண்டாம் கட்ட தலைவர்களும், தனியார் ஏஜெண்சியின் பிடியில் கட்சியின் செயல்பாடுகள் செல்வதை கட்சியினரும் விரும்பாத நிலையில் படகை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க தள்ளப்படுள்ளது.

கட்சியின் தலைவரோ யார் என்ன மனநிலையில் இருந்நாலும் சரி "நான் கலைஞரின் மகன், அவர் இல்லாத இந்த முதல் தேர்தலில் ஆட்சி கட்டிலில் நான் அமர்ந்தே தீருவது தான் என் குறிக்கோள்" என குடும்பம், ஏஜென்சி சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு கேட்கிறார். மாவட்ட ரீதியில் செயல்படும் செயலாளர்களோ "போதும்டா சாமி இதுக்கு மேல செலவு பண்ண காசில்லை" என வெளிப்படையாகவே புலம்ப ஆரமித்துவிட்டனர். படகை செலுத்துபவர்கள் துடுப்பை வேகமாக போட வேண்டும் என்பது மரபு. ஆனால், தி.மு.க என்னும் படகை செலுத்த வேண்டிய கட்சிக்காரர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் துடுப்பை வெறுமனே ஆட்டி பாவனை செய்கிறார்கள். தலைமைக்கோ இது வேகம் என்று தோன்றலாம் ஆனால் படகு நகரவில்லை என புரிய நாள் ஆகலாம்.

அ.தி.மு.க-வின் செயல்பாடுகளோ ஒரு தலைமையின் கீழ் வந்தாலே பெரிய விஷயம் தப்பித்து வந்துவிடலாம் என கணக்கு போட்ட காலம் போய் அடுத்த தேர்தலிலும் கூட எடப்பாடியார் சி.எம் வேட்பாளர் என அறிவித்தே தேர்தலை சந்திக்கலாம் என பேசும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. EPS அணி OPS அணி என பேசிக்கொண்டிருந்த காலம் மெல்ல கரைய தொடங்கிவிட்டது. மேலும் வலு சேர்க்கும் விதமாக சசிகலா விடுதலை மற்றும் அ.ம.மு.க இணைப்பு.

இரண்டும் நடைபெறும் பட்சத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி பீடத்தில் அமர்ந்த அ.தி.மு.க தற்பொழுதும் ஆட்சி பீடத்தில் அமர்வதில் சந்தேகமே இல்லை என்ற அ.தி.மு.க தரப்பு எடை போடுகிறது. அந்த அளவிற்க்கு அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளால் கட்சிக்கு வாக்கு வங்கி சாதகமாகி கொண்டே செல்கிறது என தீர்க்கமாக நம்புகிறதாம் கட்சி தலைமை. அ.தி.மு.க-வுடன் மீதும் இணைய தினகரன் தரப்போ சசிகலா விடுதலை மற்றும் வழக்குகளில் சாதகம் என இரு கோரிக்கை மட்டும் கேட்டதாகவும் இரண்டுமே நடைபெறும் பட்சத்தில் அ.தி.மு.க, அ.ம.மு.க இணைப்பு முற்றிலும் சாத்தியமே என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையெல்லாம் தாண்டி தி.மு.க-வில் இருந்துக் கொண்டே வலுவான கூட்டணியான அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க கூட்டணிக்குள் சட்டமன்ற தேர்தலுக்குள் சென்று விட சில கட்சிகள் அடித்தளமிட்டுள்ளதாக தெரிகிறது. இது நடக்கும் பட்சத்தில் ஒர் இலக்க அளவிலான எண்ணிக்கையிலாவது தொகுதிகள் கிடைக்கும், அதுவும் தமக்கு சாதகமே என தி.மு.க கூட்டணி கட்சிகள் சில மனக்கணக்குகள் போடுவதாக தகவல்.

அப்படி, இப்படி என எப்படி பார்த்தாலும் அரசியல் சாணக்கியனின் வாரிசுக்கு தேர்தலில் விழப்போகும் ஓட்டையை அடைக்கு ராஜதந்திரம் போதவில்லை என சீனியர் உ.பி-க்கள் காது படவே சொல்கின்றனர்.

- காலம் யாருக்கு என்ன வைத்துள்ளது என பார்ப்போம்.

Similar News