இந்தியா - சீனா எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் 21 குண்டு முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்.!

இந்தியா - சீனா எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் 21 குண்டு முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்.!

Update: 2020-06-18 04:26 GMT

சீனா நாட்டின் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனி வீரமரணம் அடைந்துள்ளார். இன்று அவருடைய உடல் அவரின் சொந்த ஊரில் 21 குண்டு முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் நேற்று முன்தினம் இந்திய சீன ராணுவத்தினர் இடையே திடீரென மோதல் நடந்தது. அந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர். அதில் ஒருவர் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனியும் வீரமரணம் அடைந்து உள்ளனர். இன்று அவருடைய உடல் ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வந்தது. பின்னர் அவருடைய உடலுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் வினய் மலரஞ்சலி செலுத்தினார். அதன் பின் வாகனம் மூலம் அவருடைய உடல் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


அந்த கிராமத்தின் எல்லைப் பகுதியில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அவருடைய உடல் ராணுவ வாகனத்தில் மாற்றப்பட்டு ராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு சென்றன. இந்தியா கொடி அவரின் உடலில் போற்றப்பட்டு உடலைப் பார்த்த குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும், பழனியின் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.   

Similar News