232.209 பில்லியன் நிதியை தர சம்மதம் தெரிவித்த ஜப்பான்.. தமிழக நலனையும் உள்ளடக்கியது தெரியுமா.?
இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஒன்பது திட்டங்களுக்கு 232.209 பில்லியன் ஜப்பானிய யென் நிதியை அதிகாரப்பூர்வ அபிவிருத்தி உதவி கடனாக ஜப்பான் வழங்குகிறது. ஜப்பான் அரசு பல்வேறு துறைகளில் ஒன்பது திட்டங்களுக்கு 232.209 பில்லியன் யென் அதிகாரப்பூர்வ அபிவிருத்தி உதவிக் கடனாக வழங்க உறுதியளித்துள்ளது. இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் மற்றும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் சுசுகி ஹிரோஷி இடையே இதற்கான முடிவுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
வடகிழக்கு சாலை வலையமைப்பு இணைப்பு மேம்பாட்டுத் திட்டம், தெலுங்கானாவில் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமையை ஊக்குவிப்பதற்கான திட்டம், சென்னை சுற்றுவட்டச் சாலை (2-வது கட்டம்) கட்டுமானத்திற்கான திட்டம், ஹரியானாவில் நிலையான தோட்டக்கலையை மேம்படுத்துவதற்கான திட்டம், ராஜஸ்தானில் பருவநிலை மாற்ற நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் மேம்பாட்டுக்கான திட்டம், கோஹிமாவில் உள்ள நாகாலாந்து மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நிறுவுவதற்கான திட்டம், உத்தரகண்டில் நகர்ப்புற நீர் வழங்கல் அமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் ஆகியவை அடங்கும்.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் சாலை கட்டமைப்பு இணைப்பு திட்டங்கள் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் சென்னை புற வட்டச் சாலை திட்டம் போக்குவரத்து நெரிசலைத் தணிப்பதையும் மாநிலத்தின் தெற்குப் பகுதிக்கான இணைப்புகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Input & Image courtesy: News