சென்னையில் 27 டன் பிரியாணி அரிசி லாரியுடன் மாயம்! டிரைவருக்கு 5 நாட்களாக வலை வீச்சு!

சென்னையில் 27 டன் பிரியாணி அரிசி லாரியுடன் மாயம்! டிரைவருக்கு 5 நாட்களாக வலை வீச்சு!

Update: 2019-11-23 12:23 GMT

ஒரே சமயத்தில் பல டன் அரிசியில் பிரியாணி தயாரிப்பதை சாதனையாக பார்த்திருக்கிறோம். ஆனால் 27 டன் பிரியாணி அரிசியை சுட்டுச்சென்ற லாரி டிரைவரை சென்னை போலீசார் 5 நாட்களாக வலைவீசித் தேடி வருகின்ற சம்பவம் இது.


இது குறித்து போலீசார் கூறியதாவது: சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் மருதமுத்து. இவருக்கு சொந்தமான சரக்கு லாரியில் டிரைவராக வேலை பார்ப்பவர் சாமி. இந்த லாரியில் உதவியாளராக பணிபுரிபவர் சுந்தர். சென்ற திணைகள் கிழமை திருவொற்றியூரிலுள்ள அரிசி கிடங்கிலிருந்து ரூ.21 லட்சம் மதிப்புள்ள 27 டன் (27000 கிலோ) பிரியாணி அரிசியை பூந்தமல்லியில் உள்ள மொத்த வியாபாரியின் கடைக்கு அனுப்ப இந்த லாரியில் ஏற்றப்பட்டுள்ளது.


சரக்கு ஏற்றப்பட்டதும் சுந்தரை நீ போய் உன் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு வந்து விடு என்று சாமி கூறினார். அருகே உள்ள வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு சுந்தர் வந்ததும் லாரியை காணாமல் திடுக்கிட்டார். சுற்றும் முற்றும் தேடினார். கிடைக்கவில்லை. சாமிக்கு போன் போட்டார். பிரயோஜனம் இல்லை. இது குறித்த தகவலை உரிமையாளருக்கு கூறினார்.


போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் லாரி டிரைவரின் செல் பேசி எண்ணுக்கு தொடர்ந்து கொண்டதில் அது ஸ்விட்ச் ஆப் செயப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, டிரக்கில் ஜி.பி.எஸ் அமைப்பும் நிறுவப்படவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


https://www.newindianexpress.com/cities/chennai/2019/nov/21/chennai-trucker-drives-off-with-biriyani-rice-worth-rs-21-lakh-2065186.html?utm_source=Dailyhunt




Similar News