3-லட்சம் பேருக்கு வேலை கொடுக்கும் சினிமா ஸ்டார் சோனு.!

3-லட்சம் பேருக்கு வேலை கொடுக்கும் சினிமா ஸ்டார் சோனு.!

Update: 2020-08-01 08:16 GMT

சினிமாவில் இவரைப்போல ஒரு நல்ல உள்ளத்தை பார்க்கவே முடியாது. அடுத்தடுத்த உதவிகள் செய்து வரும் நல்ல உள்ளம் கொண்டவர் இவர். இவர் செய்த உதவிகளை லிஸ்ட் போடவே முடியாது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக பாலிவுட் நடிகர் சோனு சூட் தெரிவித்திருக்கிறார். படிப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள மாணவ,மாணவிகளை அழைத்து வர தனது சொந்த செலவில் தனி விமானம் அமைத்து அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சாப்பாடு, பணம் இல்லாமல் தவித்த அவர்களுக்கு அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்தார். தற்போது ஒரு விவசாயி மாடு வாங்க பணம் இல்லாததால் தன் சொந்த மகளையே ஏரில் பூட்டி உழுது வந்தார் அந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் பரபரப்பானது அதை பார்த்து சோனு சூட் அவர்களுக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார்.

இன்னிலையில் அவரது பிறந்தநாளுக்கு 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க இருப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இவர் நல்ல சம்பளம் இன்ஷூரன்ஸ் தொழிலாளர் வைப்பு நிதி ஆகிய வசதிகளோடு வேலை வாய்ப்புகள் வாங்கி தரப்படும் என்று கூறியிருந்தார். இதை அறிந்து இவர் ரசிகர்களும் பல்வேறு தரப்பினரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News