அது என்ன 30 நாள் சோதனை..? முயன்று தான் பாருங்களேன்…!!

அது என்ன 30 நாள் சோதனை..? முயன்று தான் பாருங்களேன்…!!

Update: 2019-12-02 01:55 GMT

நம் சுய முன்னேற்றத்திற்க்கு ஒரு சிறிய சிறந்த கருவி “30 நாள் சோதனை(Trial)”. அது என்ன“30 நாள் சோதனை(Trial)” என்கிறீர்களா? உங்கள் வாழ்க்கை முறையை செறிவானதாகமாற்ற, உங்கள் செயல்பாடுகளை வெற்றியை நோக்கி செலுத்த ஏதோவொரு பழக்கத்தைவளர்க்க வேண்டும் அல்லது வேண்டாத பழக்கங்களில் ஒன்றை விட வேண்டும் எனும் நிலைவந்தால் முயற்சித்து பாருங்கள் இந்த “30 நாள் சோதனை”யை.


நம் உடலும் மனமும் முழுமையாக ஊறிப்போன ஓர் பழகத்திலிருந்து எப்படி நிரந்தரமாகவிடுபடுவது என்ற எண்ணம் ஓர் கட்டத்தில் அழுத்தமாக மாற கூடும். இதில் “நிரந்தரம்” என்றவார்த்தையை களைந்து பாருங்கள்…. இது ஒரு விளையாட்டு போல செய்துவிடமுடியும்.“வெறும் முப்பது நாட்களுக்கு மட்டும் முயற்சித்து பார்ப்போம் பின்பு இயல்பு நிலைக்கேதிரும்பிவிடலாம்” என்ற சாமர்த்தியமான சிந்தனையை செயல்படுத்துங்கள்.


30 நாட்கள் மட்டும் அதிகாலை எழுந்தால் போதும்…. மீண்டும் எப்போதும் போல் காலை 8மணிக்கு எழுந்து கொள்ளலாம். 30 நாள் மட்டும் உங்கள் அலுவலக இருக்கையை, மேஜையைசுத்தமாக வைத்து கொண்டால் போதும் பின் மீண்டும் அதே கசகசப்பான சூழலுக்குமாறிக்கொள்ளலாம். 30 நாட்கள் மட்டும் புத்தகத்தின் சில பக்கங்களை புரட்டினால் போதும்அதன்பின் நிச்சயமாக தொலைகாட்சியில் தொலைந்து போகலாம். நாம் மேற்கொண்டிருக்கும்முயற்சி தற்காலிகம் தான் நிரந்தரமல்ல என்கிற சிறுநேரத்து மனஅமைதி விளைவிக்கும்மாற்றங்களை 30 நாட்கள் சோதனையாக செய்து தான் பாருங்களேன்…?


இதை செய்வதற்க்கும் ஓர் சிறு அளவிலான மன உறுதியும், ஒழுங்குமுறையும் தேவை. ஆனால்முப்பது நாட்கள் மட்டும் தானே என்கிற செளகரியும் அதிலுள்ள இடர்களை, இடஞ்சல்களைநீக்க உதவும். இதனால் நமக்கு என்ன கிடைத்து விட போகிறது என எண்ணுகிறீர்களா?உதாரணமாக, காலையில் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற பழக்கத்தைமுப்பது நாட்கள் சோதனையோட்டமாக செய்து முடித்துவிட்டீர்கள். 30 நாட்களுக்கு பின்உங்கள் தினசரி வாழ்வில் அப்பழக்கத்திற்க்கென பிரத்யேக நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.அப்பழக்கம் உங்களுள் ஒன்றாக, ஏன் நீங்களாகவே மாறத்துவங்கியிருக்கும். 30 நாட்களுக்குபின் எதை பின்பற்ற அல்லது கைவிட துவங்கினீர்களோ அது இயல்பாகவே நடக்க துவங்கும்.


ஒரு வேளை உங்களின் எதிர்மறையான மனதிடம் நீங்கள் துவங்கிய பழக்கத்தை கைவிடநிர்பந்தித்தால். தயக்கமே கொள்ளாதீர்கள் கைவிட்டுத்தான் பாருங்களேன்…உங்களுள் நல்மாற்றம் நிகழ வேண்டுமென நீங்கள் துவங்கிய அல்லது கைவிட்ட பழக்கத்தைகடந்த முப்பது நாட்களில் செயல்படுத்தியபோதும், முப்பது நாட்களுக்கு பின் கைவிட்டபிறகும் இருக்கும் வித்தியாசம், கற்றல், “அடடா…. எதற்காக கைவிட்டோம்…? இன்னும்தொடர்ந்திருக்கலாமே” என்ற அங்கலாய்ப்பு என அனைத்தும் ஒன்றினைந்து மீண்டும்உங்களை தொடர வைக்கும். மீண்டும் நீங்கள் தொடர்கிற சமயம் அப்பழக்கம் முப்பதுநாட்களுக்கான சோதனையோட்டமாக இராது… நிச்சயம் வாழ்நாள் முழுமைக்கானதாகஇருக்கும்.


Similar News