மாதம் ரூ 3000 சம்பளம், அதில் போலீசாருக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்த பெண்ணுக்கு சல்யூட் அடித்து நன்றி தெரிவித்த டிஜிபி.!

மாதம் ரூ 3000 சம்பளம், அதில் போலீசாருக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்த பெண்ணுக்கு சல்யூட் அடித்து நன்றி தெரிவித்த டிஜிபி.!

Update: 2020-04-20 05:03 GMT

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மாதம் ரூ.3000 வருமானத்தில் பணியாற்றி வருகிறார்.

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் களைப்பினை போக்குவதற்கு குளிர்பான பாட்டில் வாங்கி கொடுத்துள்ளார்.

இது பற்றி அந்த பெண் கூறுகையில், நான் மாதம் 3000 ரூபாய் வருமானம் சம்பாதிக்கிறேன்.

ஆனால் அதை விட பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அவர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவியை செய்தேன் என்று கூறினார்.

அந்த பெண்ணின் செயல் காண்போரை மட்டுமின்றி போலீஸ் அதிகாரிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, இந்த செயலுக்காக அனைத்து போலீசாரும் அந்த பெண்ணை பாராட்டினர். இந்த சம்பவத்தை ஆந்திர முன்னாள் மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் பாராட்டி ட்விட்டரில் பகிர்ந்தார்.

இந்த பதிவு ஊரடங்கு நேரங்களில் மனிதநேயத்தை நிரூபிக்கும் பதிவாக அமைந்தது.

அந்த பெண்ணின் விலைமதிப்பில்லாத உதவியை உண்மையிலேயே பாராட்டுகிறேன் என்று தெரிவித்த நிலையில் இன்று ஆந்திரா போலீஸ் டிஜிபி வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தனது பாராட்டுகளையும் நன்றியையும் சல்யூட் அடித்து தெரிவித்தார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறைந்த வருமானம் சம்பாதித்தாலும் தனது தாய்நாடு கொரோனா என்ற கொடிய நோய் தொற்றில் இருந்து மீள்வதற்கு தனது சிறிய பங்களிப்பை செய்த பெண்ணின் செயல் மிகவும் போற்றத்தக்கது.

Similar News