புதுச்சேரி மாநிலத்தில் 3 ஆயிரத்து 25 பேர் தனிமை படுத்தி கண்காணிப்பில் உள்ளனர் என முதலமைச்சர் நாராயணசாமி தகவல்..

புதுச்சேரி மாநிலத்தில் 3 ஆயிரத்து 25 பேர் தனிமை படுத்தி கண்காணிப்பில் உள்ளனர் என முதலமைச்சர் நாராயணசாமி தகவல்..

Update: 2020-04-05 04:56 GMT

புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி கோரோனா வைரஸ் நிலவரம் குறித்து சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

புதுச்சேரியில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியோரில் 6 பேரில் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் ஆகிய 17 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. இதேபோல் காரைக்காலில் டெல்லி சென்று திரும்பிய 7 பேருக்கும் பாதிப்பு இல்லை.

புதுச்சேரி மாநிலம் முழுக்க 3 ஆயிரத்து 25 பேர் வீட்டுக்காவலில் கண்காணிப்பில் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து வந்தோர், டெல்லி சென்று வந்தோரை தொடர்பு கொண்டோரும் இதில் அடங்குவர். காரைக்கால், ஏனாம், மாகி பிராந்தியங்களில் கொரோனா தொற்று யாருக்கும் இல்லை. புதுவையில் 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்றுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளோடு கலந்து பேசி மகளிர் குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் கடன் வழங்க வலியுறுத்தியுள்ளோம். வங்கிகளும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்கான வட்டி 7 சதவீதத்தில் 3 சதவீத வட்டியை மாநில அரசு ஏற்கும். இதனை நகர் பகுதி சுயஉதவி குழுக்களுக்கும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 4 கோடி செலவாகும். கொரோனா சிகிச்சைக்கு முக்கிய தேவையான வெண்டி லேட்டர், உடைகவசங்கள், மானிட்டர்கள், முககவசம் கிடைக்காததால் அதை தயாரிக்கும் தொழிற்சாலை களுக்கு அரசு நிலத்தில் சலுகையும், முதலீட்டு மானியம் 30 சதவீதம் வரிசலுகை, உற்பத்தி மானியம் தரப்படும் என்றார்.

Similar News