எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் 4½ மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தை.!

எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் 4½ மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தை.!

Update: 2020-06-11 03:16 GMT

கிழக்கு லடாக்ஹில்  பங்கோங் சோ அருகே இந்தியா-சீனா படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் எல்லையில் பதற்றம் நிலவி வந்தது.

கடந்த 6-ந் தேதி இந்திய – சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் உகான் மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் எடுத்த முடிவுகளை பின்பற்றுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

லடாக் எல்லையில் பங்கோங் சோ, தவுலத் பெக் ஓல்டி, டெம்சோக் ஆகிய 3 பகுதிகளில் இருந்து இந்திய-சீன படைகள் இன்னும் வாபஸ் ஆகவில்லை.

அப்பகுதியில் நிலவும் பதற்ற நிலைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு தரப்பு மேஜர் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று 4½ மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

அப்போது இந்த 3 பகுதிகளிலும் முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும், கணிசமான துருப்புகளை சீனா வாபஸ் பெற வேண்டும் என்றும் இந்திய தரப்பில் வலியுறுத்த பட்டதாக தெரியவருகிறது.

கொரோனா பிரச்சனை காரணமாக இந்தமுறை சீனா மீது லடாக் மக்கள் கோபம் பெருகியுள்ளது.

எங்கள் புல்வெளியில் நிறைய பகுதியை சீனர்கள் கைப்பற்றி விட்டனர்.  அவ்வாறு கால்நடைகளுக்குத் தேவையான புல்வெளி முழுவதையும் அவர்கள் கைப்பற்றிவிட்டால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கும். கால்நடைகளை சார்ந்து வாழும் உள்ளூர் மக்களுக்கு இது வாழ்வியல் பிரச்சனையும் ஆகும்.

எப்போதெல்லாம் இந்த பகுதியில் பதற்றம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் உதவி செய்வதில் இந்திய ராணுவம் முன்னால் இருக்கும் என்கின்றனர் உள்ளூர் மக்கள். 

Similar News