குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 4 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜினாமா! தேசிய அரசியலில் சலசலப்பு!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 4 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜினாமா! தேசிய அரசியலில் சலசலப்பு!

Update: 2020-01-02 13:01 GMT


தேசிய குடியுரிமைப் பதிவேடு மற்றும் குடியுரிமைத் திருத்த சட்ட விவகாரத்தில்  காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவா காங்கிரசின் மூத்த தலைவர்கள் 4 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.


பனாஜி காங்கிரஸ் பிளாக் கமிட்டி தலைவர் பிரஷாத் அமோன்கர், வடக்கு கோவாவின் சிறுபான்மைத் தலைவர் ஜாவீத் ஷேக், வட்டார கமிட்டி செயலாளர் தினேஷ் குபால், கோவா முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷிவ்ராஜ் தர்கர் ஆகிய நான்கு பேரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.


 கட்சியில் இருந்து விலகிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமோன்கர் “ குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசியக் குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.


மேலும் இந்த விவகாரத்தில் பொதுமக்களை குறிப்பாக சிறுபான்மை மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துவதால் காங்கிரஸ் கட்சி  எடுத்துள்ள தவறான நிலைப்பாட்டுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து தெரிவிக்கிறோம்” என்றும் கூறினார்.


Similar News