பாஜகவில் 4 தெலுங்குதேச மேல்சபை எம்பிக்கள் இணைந்தனர்! சந்திரபாபு நாயுடு கூடாரம் காலியாகிறது!!

பாஜகவில் 4 தெலுங்குதேச மேல்சபை எம்பிக்கள் இணைந்தனர்! சந்திரபாபு நாயுடு கூடாரம் காலியாகிறது!!

Update: 2019-06-20 13:35 GMT


ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் மேல்சபை எம்பிகளான டி.ஜி வெங்கடேஷ், ஒய்.எஸ் சவுத்ரி, சிஎம் ரமேஷ், கரிக்கப்பட்டி மோகன் ராவ் ஆகிய 4 பேரும் இன்று திடீரென  பாஜகவில் இணைந்தனர்.  


அவர்கள் அனைவரும், துணை ஜனாதிபதியும், டெல்லி மேல்சபை தலைவருமான வெங்கையா நாயுடுவை சந்தித்து இதற்கான கடித்தத்தை கொடுத்தனர். அந்த கடிதத்தில், “தெலுங்கு தேசம் கட்சியில் மொத்தமுள்ள 6 மேல்சபை எம்பிக்களில் நாங்கள் 4 பேர் பாஜகவில் இணைந்துள்ளோம். எனவே எங்களை பாஜக உறுப்பினர்களாக உடனே அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.


வெங்கையா நாயுடுவை சந்தித்தபோது, பாஜகவின் செயல் தலைவர் ஜேபி நட்டாவும் உடன் இருந்தார். அவர்கள் முதலில் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டு அதன்பிறகு முறைப்படி மேல்சபை தலைவரான வெங்கையா நாயுடுவிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.


மொத்தம் உள்ள 6 தெலுங்கு தேசம் கட்சி மேல்சபை எம்பிக்களில் 4 பேர் என்பது 3 - இல் 2  பங்கு எம்பிகள் ஆகும். எனவே 3 - இல் 2 பங்கிற்கு குறைவில்லாமல் உள்ளதால் இவர்கள், பாஜகவில் இணைந்தது சட்டப்பூர்வமானது ஆகும். இவர்கள் மீது கட்சித் தாவல் சட்டம் பாயாது.


4 எம்பிக்கள் பாஜகவில் இணைந்துள்ளதால், சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளார். அதே நேரம் 245 உறுப்பினர்களைக்கொண்ட மேல் சபையில் பாஜக கூட்டணியின் பலம் 106 - ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Source : https://www.ndtv.com/india-news/2-of-6-telugu-desam-party-rajya-sabha-mps-say-they-are-joining-bjp-2056491


Similar News