ஹூவேய் 5 ஜி திட்டத்தை தடை செய்ய இங்கிலாந்து அரசு முடிவு - சீனாவுக்கு வலுவாகும் எதிர்ப்பு.!

ஹூவேய் 5 ஜி திட்டத்தை தடை செய்ய இங்கிலாந்து அரசு முடிவு - சீனாவுக்கு வலுவாகும் எதிர்ப்பு.!

Update: 2020-07-15 06:07 GMT

அமெரிக்காவை திருப்திப்படுத்தும் வகையில் சீனா நாட்டின் ஹூவேய் நிறுவனத்தின் 5 ஜி தொழில்நுட்பத்தை இங்கிலாந்து அரசு தடை விதித்துள்ளது.

ஜனவரி மாதம் ஹூவேய் நிறுவனத்திலிருந்து 5 ஜி தொழில்நுட்பத்துக்கு இடம் கொடுப்பதற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவெடுத்திருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் பற்றிய முழுமையான தகவல்களை மூடி மறைக்கிறது எனவும் மற்றும் ஹாங்காங் மீது தன்னுடைய அதிகாரத்தை கொண்டு சீனா அரசு நடவடிக்கை எடுக்கிறது என்பதால் சீனா மீது உலக நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

தற்போது சீனா நாட்டின் ஹூவேய் நிறுவனத்தின் 5 ஜி தொழில் நுட்பத்துக்கு இங்கிலாந்து அரசு தடை தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்றுநடக்கவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிடுவார் என தகவல்கள் கூறப்படுகிறது.

மேலும், இதற்கு முன்பு இந்தியா சீனா நாட்டின் 59 செயலிகளை தடை செய்தது. இதன் பின்னர் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் ஹாங்காங் மக்களுக்கு குடியுரிமை அளிப்பதாக தெரிவித்தார். இதனால் சீனா கண்டனத்தை தெரிவித்தது. அமெரிக்கா சீனா மீது பல எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.

இதன் மூலம் சீனா நாட்டின் மீது உலக நாடுகளின் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.  

Similar News