50,000 இதய செயலிழப்பு அவசர சிகிச்சைக்கான ஊசி மருந்துகளை இலங்கைக்கு வழங்கிய இந்தியா!

Update: 2025-03-14 16:37 GMT

இலங்கை மருத்துவமனையில் இதய செயலிழப்பு உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகக் கோளாறு உள்ளிட்டவற்றின்  அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஃபியுரோசிமைட் ஊசி மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் உள்ளதாக இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு உடனடியாக இந்தியா 50,000 ஃபியுரோசிமைட் ஊசி மருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது 

எப்பொழுதுமே இந்தியா நம்பகத்தன்மைக்குரிய நண்பனாகவும் இலங்கைக்கு அவசர காலத்தில் உதவி புரியும் நாடகம் உள்ளது அதுமட்டுமின்றி இலங்கையில் முக்கியமான மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படும் பொழுது அவற்றை இந்தியா வழங்கியுள்ளது அதாவது கொரோனா காலகட்டத்தில் 25 டன் மருந்துகள் சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு இந்தியாவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலும் ஐந்து லட்சம் கோவிட் ஷீல்ட் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளது 

Tags:    

Similar News