புதுச்சேரி: கலக்கத்தில் புதுச்சேரி சுகாதாரத்துறை! ஒரே நாளில் 59 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

புதுச்சேரி: கலக்கத்தில் புதுச்சேரி சுகாதாரத்துறை! ஒரே நாளில் 59 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Update: 2020-06-24 12:21 GMT

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது இதனிடையே பாதிப்புகள் குறித்து சடப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்,

புதுச்சேரியில் 441 நபர்களிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 59நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இதில் புதுச்சேரியை சேர்ந்த -58 நபர்களுக்கு மாஹே பிராந்தியத்தை சேர்ந்த -01 ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 276நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 176நபர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 9நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.




 


தொடர்ந்து பேசிய அவர் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 59நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி மாநில மக்கள் கொரோனா குறித்த அச்சம் இருக்க வேண்டும் என்றும் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிற நேய்களுக்காக அனுமதிக்கப்படுள்ள நோயாளிகள் அனைவரும் அரசு மருத்துமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு வரும் 26ஆம் தேதி முதல் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுமையாக கொரோனா மருத்துவமனையாக செயல்படும் என்றார் இதேபோல் நாளை முதல் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலம் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றார்.

Similar News