ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போகும் அரசு ஆசிரியர்கள்!! திமுக கோரிக்கையை நிறைவேற்றுமா?
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கே.சாந்தகுமார், அந்தோணிசாமி ஆகியோர் அங்கு தலைமை வகித்தனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், சரண் விடுப்பு தொகையை அமல்படுத்துதல் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் அவர்கள் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் இந்தக் கோரிக்கையானது நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.