₹75.28 கோடி செலவில் மேலும் ஆக்ஸிஜன் குழாய் இணைப்புடன் 13,900 படுக்கைகள் ஏற்பாடு - பொதுப்பணித்துறை தீவிரம்!

₹75.28 கோடி செலவில் மேலும் ஆக்ஸிஜன் குழாய் இணைப்புடன் 13,900 படுக்கைகள் ஏற்பாடு - பொதுப்பணித்துறை தீவிரம்!

Update: 2020-06-21 05:39 GMT

அரசு மருத்துவமனைகளில் ₹75.28 கோடி செலவில் மேலும் ஆக்ஸிஜன் குழாய் இணைப்புடன் 13,900 படுக்கை வசதி ஏற்பாடு செய்ய பொதுப்பணித்துறை தீவிரமாக நடவடிக்கை ஆரமிக்கப்படுள்ளது.

இதுபற்றி தமிழக பொதுப்பணித்துறை இணை முதன்மை தலைமை பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி அவர்கள் கூறியது

"தமிழக அரசு மருத்துவமனை'களில் ஏற்கனவே 30 ஆயிரத்து 100 படுக்கைகள் உள்ளன இவற்றில் 13,900 படுக்கைகள் ஆக்ஸிஜன் குழாய் பொருத்தி வசதியுடன் உள்ளது. மீதமுள்ள படுக்கைகளில் ஒவ்வொரு படுக்கைகளிலும் ஆக்ஸிஜன் குழாய், அழுத்தமான காற்று வரும் குழாய், வெற்றிடமான குழாய் என மூன்று குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 20 லட்சம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர்கள் இணைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. சென்னையில் சுமார் 5,500 படுக்கைகள் ஆக்ஸிஜன் குழாய் இணைப்புகளை கொண்டுள்ளன".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News