ஆயுஷ்மான் திட்டத்தில் சிகிச்சைபெற தமிழத்திலிருந்து மட்டும் ஒரே மாதத்தில் 89,000 பேர் சிகிச்சை பெற விண்ணப்பம்: மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

ஆயுஷ்மான் திட்டத்தில் சிகிச்சைபெற தமிழத்திலிருந்து மட்டும் ஒரே மாதத்தில் 89,000 பேர் சிகிச்சை பெற விண்ணப்பம்: மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

Update: 2019-01-28 03:52 GMT
மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கிய ஒரு மாதத்தில் ₹200 கோடி மதிப்பில் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் இந்தியாவில் 1.5 கோடி பேர் பயனடைந்துள்ளதாகவும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டுவித்த பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்., வரவேற்றார். முதல்வர் பழனிசாமி வாழ்த்தி பேசினார். மதுரை தோப்பூரில் ₹1,264 கோடியில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 202 ஏக்கரில், 750 படுக்கை வசதியுடன், கட்டுமானப் பணி, 48 மாதங்களில் நிறைவடையும். இங்கு, 100 எம்.பி.பி.எஸ்., படிப்பு இடங்கள், 60 பி.எஸ்சி., நர்சிங் படிப்பு களுக்கான இடங்கள் அனுமதிக்கப்படும். கட்டு மானம், செயல்பாடு, பராமரிப்பு முழுவதும், மத்திய அரசால் மேற்கொள்ளப்படவுள்ளன. மக்களுக்கு உயர்தர சிகிச்சை வசதி கிடைப்பது மட்டுமின்றி, அதிக டாக்டர்கள், சுகாதார ஊழியர்களை உருவாக்க பயன்படும். இதற்கு, இன்று காலை, 11:30 மணிக்கு, மதுரை, மண்டேலா நகர் ரிங் ரோடு பகுதியில் நடந்த விழாவில்,பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.அரசு மருத்துவ கல்லுாரிகள் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக, மதுரை, தஞ்சாவூர் மற்றும் நெல்லை மருத்துவக்கல்லுாரிகளில், ₹450 கோடியில், கட்டப்பட்ட பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவுகளையும், பிரதமர் திறந்து வைத்தார்
அங்கு பெருந்திரளாக கூடிஇருந்த மக்கள் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒவ்வொரு மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். மதுரை, தஞ்சை, நெல்லையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவப் பிரிவை தொடங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கிய ஒரு மாதத்தில் ₹200 கோடி மதிப்பில் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில் 1.5 கோடி பேர் பயனடைந்துள்ளனர். ஒரு மாதத்தில் மேலும் சுமார் 89,000 பேர் சிகிச்சை பெற விண்ணப்பித்துள்ளனர்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் மத்திய அரசின் இந்த மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் 30 சதவீத மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் என்றார்.

Similar News