9 மாதத்திற்குதேவையான உணவு தானியம் இருக்கிறது, உணவுக்கு பஞ்சம் வராது - பஸ்வான்

9 மாதத்திற்குதேவையான உணவு தானியம் இருக்கிறது, உணவுக்கு பஞ்சம் வராது - பஸ்வான்

Update: 2020-04-16 10:52 GMT

கொரோனா நோய்தொற்று அச்சம் காரணமாக பொது மக்கள் வீடுகளில் முடங்கி இருகின்றனர் ஏழை மக்களுக்கு சரியான நேரத்தில் உணவு தானியங்களை விநியோகம் செய்வது மத்திய அரசின் நோக்கமாகும்

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் என்பது நாட்டில் எப்போது இல்லாத அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பணியாக மத்திய அரசு செய்து வருவது குறிப்பிடத்தக்கது

மத்திய அரசின் பொது விநியோகத் திட்டம் மூலம் மாதம் ஒன்றுக்கு 60 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் விநியோகம் செய்யபட்டுள்ளது

கடந்த சில தினங்களுக்கு முன் தொடர்வண்டி மூலம் 20.19 லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது சாதனையாகும்

பொது விநியோக திட்டத்தில் 81 கோடி பயனாளிகளுக்கு 9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் பருப்பு வகைகள் மத்திய அரசிடம் கையிருப்பு இருக்கிறது

குறுவை சாகுபடி விளைச்சல் அமோகமாக இருப்பதால் இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான உணவு தானியத்தை பெற முடியும்

மத்திய அரசு கிடங்கில் இருந்து 299.45 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் 235.33 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை ஏழைமக்களுக்கு விநியோகம் செய்ய பட்டுள்ளது என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Similar News