கடந்த 9 ஆண்டுகளில், இந்திய அளவில் அதிகமான சாதனை படைத்த தமிழக உள்ளாட்சித் துறை - 16.28 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது!

கடந்த 9 ஆண்டுகளில், இந்திய அளவில் அதிகமான சாதனை படைத்த தமிழக உள்ளாட்சித் துறை - 16.28 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது!

Update: 2020-07-08 09:03 GMT

கடந்த 9 ஆண்டுகளில், இந்திய அளவில் தமிழக உள்ளாட்சித் துறை அதிகமான சாதனைகளை படைத்துள்ளது.

நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் இதுவரை 16.28 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவிலேயே மிக அதிகமானதாகும். ஊரகப் பகுதிகளில் இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ், 2011-12ம் ஆண்டு முதல், 2019 -2020ம் ஆண்டு வரையில் 9291 கி.மீ நீளமுள்ள 3592 சாலைப் பணிகள் மற்றும் 132 பாலங்கள் ரூ. 4258 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான், ஊரகப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், 99.11 விழுக்காடு குழாய் மூலம் வழங்கப்பட்டு, வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

22.54 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு 2019-20ம் ஆண்டு முடிய 65,930 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளன. இவற்றோடு, கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து 11 சீர்மிகு நகரத் திட்டங்களிலும், இத்திட்டப் பணிகள் முழுவீச்சில் துவங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் உள்ளது.

இந்திய அளவில் தற்போது தமிழகம் 150.43 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளதே இதற்கு சான்றாகும். சீர்மிகு நகரத் திட்டம் போன்ற பிற திட்டங்களை குறித்த காலத்திற்குள் விரைந்து செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்ப்பதே இந்த அரசின் முக்கியப் பணியாகும்.

Similar News