பாகிஸ்தான் : சூதாட்ட பந்தயத்தில் 'கலந்து' கொண்டதாக ஒரு கழுதை உள்பட 9 'பேர்' கைது - கழுதை மீதும் FIR பதிவு.! #Pakistan #Punjab

பாகிஸ்தான் : சூதாட்ட பந்தயத்தில் 'கலந்து' கொண்டதாக ஒரு கழுதை உள்பட 9 'பேர்' கைது - கழுதை மீதும் FIR பதிவு.! #Pakistan #Punjab

Update: 2020-06-10 11:12 GMT

பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில், ஒரு கழுதை மற்றும் எட்டு நபர்களை சூதாட்ட பந்தயத்தில் ஈடுபட்டதாகப் போலீசார் கைது செய்துள்ளனர். சமா தொலைக்காட்சியின் மூலம் வந்த தகவல்களின் படி, இந்த சம்பவம் பஞ்சாப் மாகாணத்தின் ரஹீம் யர் கான் நகரில் நடந்தது. 



தகவல்களின் படி, சூதாட்டக்காரர்களிடமிருந்து 120,000 பாகிஸ்தான் ரூபாய் மீட்கப்பட்டது. இந்தப் பணம், பந்தயம் கட்டப் பயன்பட்டதாக கூறப்படுகிறது. SHO படி, கழுதை அதன் உரிமையாளருடன் குற்றம் நடந்த இடத்தில் கைது செய்யப்பட்டு தற்போது காவல் நிலைய வளாகத்திற்குள் கட்டப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 'சூதாட்ட தடுப்பு சட்டத்தின்' கீழ் செய்யப்பட்டுள்ளனர்.

வீடியோவும் செய்தியும் ஆன்லைனில் சிரிப்பலைகளை உருவாக்கியிருந்தாலும் ஒரு விஷயத்தை நாம் இங்கே குறிப்பிடலாம். கழுதை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் இருக்கலாம்.ஏனெனில் அதன் உரிமையாளரும் அங்கேயே தங்க வைக்கப்படுகிறார். விலங்குகளை பறிமுதல் செய்வது கிராமப்புறங்களில் வழக்கமாக உள்ளது, வீட்டு விலங்குகளை திறந்த வெளியில் கைவிட முடியாது, எனவே ஒரு குடும்ப உறுப்பினர் உரிமை கோரும் வரை அல்லது உரிமையாளர் ஜாமீனில் விடுவிக்கப்படும் வரை விலங்குகளை காவல் நிலைய வளாகத்திற்குள் வைத்திருப்பது ஒரே வழியாக இருக்கலாம்.

Similar News